மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் ஓந்தாச்சிமடம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து தொடர்பில்மேலும் தெரிய வருகையில்,
பெரியபோரதீவுப் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவர் முச்சக்கரவண்டியில் களுவாஞ்சிகுடி நகருக்கு வருகை தந்திருந்த நிலையில் நகரில் நின்றிருந்த தனது நண்பனிடம் அவனது உயர் ரக மோட்டார் சைக்கிளை ஓடிப்பார்ப்பதற்காக வாங்கிக்கொண்டு அண்ணன் மோட்டார்சைக்கிளை வேகமாக செலுத்த தம்பி பின்னால் அமர்ந்து கொண்டு பயணித்த நிலையில் ஓந்தாச்சிமடம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் பயணித்த துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந் நிலையில் மோட்டர்சைக்கிளிள் பயணித்த சகோதரர்கள் தூக்கி எறியப்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிவேகமாக மோட்டார்சைக்கிளை செலுத்திச் சென்றதாலே இவ் விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து செல்கின்றனர்