போலி வைத்தியர்களை கண்டறிய விசேட வேலைத்திட்டம்

நாடளாவிய ரீதியில் போலி உரிமம், சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் தகுதியற்ற வைத்தியர்களை கைது செய்வது தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோருக்கு இடையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது வைத்திய துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியிருந்தனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இலச்சினை ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக் கொண்டு அதனை முறைகேடாக பாவித்து சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும், போலி சான்றிதழ்கள் வைத்துக் கொண்டு வைத்தியர்கள் போல் நடிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்