விமானத்தில் இருந்து கீழே விழுந்த ஊழியர் : வைரலாகும் வீடியோ!

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விமான நிலைய ஊழியர்கள் விமானத்தின் உள்ளே ஆய்வு செய்துவிட்டு விமானத்தில் இருந்து இறங்க முயன்றுள்ளார்.

ஆனால் உள்ளே இருந்த அவரை கவனிக்காத மற்ற ஊழியர்கள், கீழே இறங்குவதற்காக ஏணியை அங்கிருந்து அகற்றினர்.

இதில், ஊழியர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமானத்தின் கதவு மூடும் முன் ஊழியர்கள் ஏணியை அகற்றியது ஏன் என விமான நிலைய நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்