டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், பேரழிவிற்குள்ளான நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் ” (‘Rebuilding Sri Lanka’) நிதியத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 9,687,462 ரூபா தொகையை நிதி நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
இதுவரை மூன்று சந்தர்ப்பங்களில் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களின் ஒரு நாள் சம்பளத்திலிருந்து 74 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபரின் பிரத்தியேக உதவியாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சி.சி. பமுனு ஆரச்சியினால் இந்த நிதி நன்கொடை, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுலகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் கையளிக்கப்பட்டது.
பொலிஸ் செயலகத்தின் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் உதய குமாரவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.