வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் நிலவும் வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை 21 மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண் அவதானம் செலுத்த வேண்டிய மட்டம் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அதிகளவு தண்ணீர் குடிக்கவும், மெல்லிய ஆடைகளை அணியவும் மற்றும் முடிந்தவரை நிழலான இடங்களில் இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.