புத்தளம், கற்பிட்டி – முகத்துவாரம் கடற்பகுதியில் இருந்து ஒரு தொகை பீடி இலைகள் நேற்று முன்தினம் சனிக்கிழமை மீட்கப்பட்டதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி, ஆனவாசலை மற்றும் மாம்புரி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 28 தொடக்கம் 41 வயதுகளுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது டிங்கி இயந்திர படகுகளில் இருந்து 14 உரப் பைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 497 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகுகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மதுவரி விசேட பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.