பிரித்தானிய பெண் நேற்று திங்கட்கிழமை மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில், குறித்த பெண்ணை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, அவரிடமிருந்து 46 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக, போதைப்பொருளுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.