வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக, அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்தார்.
கோதுமை மாவிற்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, பாண் ஒரு இறாத்தலின் விலை மேலும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.