-கிண்ணியா நிருபர்-
திருகோணமலையில் இயங்கி வரும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிதியம் ஊடாக நேகம பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது எதிர்காலத்தில் வாழ்வாதார திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் சரஸ்வதி பூஜை நிகழ்வுடனான அன்னதானமும் அப்பகுதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலையில் இருந்து யுத்த காலம் காரணமாக இடம் பெயர்ந்து வாழும் குறித்த பகுதி மக்களுக்காக எதிர்கால நலன்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இதில் குறித்த அமைப்பின் தலைவர் கணகசபை தேவகாட்சம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.