கண்டி தனியார் விடுதியில் தங்கியிருந்த இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் குழுவில் ஒரு மாணவர் இன்று செவ்வாய்க்கிழமை நீச்சல் தடாகத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிர் இழந்துள்ளார்.
மெனிக்ஹின்ன, குண்டசாலை, தம்பராவ பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த சந்தோஷ் (வயது – 26) என்ற இந்திய பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்பது பேர் அடங்கிய குழு கடந்த 16 ஆம் திகதி முதல் விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீச்சல் குளத்தில் விழுந்து தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.