-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் மகள் பரீட்சைக்கு செல்ல மறுத்ததால் தாய் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் நடனபாட செய்முறைப் பரீட்சைக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த அன்ரன்ஜெயபாலா உதயசந்திரிக்கா (வயது 48) என்ற 5 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தாய், மகள் நடன பாட செய்முறை பரீட்சைக்கு செல்லா விட்டால் தான் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து செத்து விடுவேன் என தெரிவித்து தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றினார்.
அதன்பின்னர் தீக்குச்சியை பற்றவைத்த நிலையில் மகளிடம் பேசிக்கொண்டு இருந்தவேளை திடீரென அவரது ஆடையில் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இந்நிலையில் அவர் மீது பரவிய தீ அணைக்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்டார்
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்