பன்னிப்பிட்டிய-தெபனம பகுதியில் அமைந்துள்ள பழைய இரும்புப் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரல்ல வீதியில், பொல்வத்த சந்திக்கு அருகில், மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குறித்த விற்பனை நிலையத்தில் இன்று காலை சுமார் 9.05 மணியளவில் தீ பரவியுள்ளது.
இதன்போது விற்பனை நிலையத்துக்கும் அங்கு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தீயணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயங்களோ உயிரிழப்புகளோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










