இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 460 கிலோகிராம் பீடி இலைகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை கற்பிட்டி, கப்பலடி மற்றும் சின்னமுக்கரை கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே இந்த இலைகள் மீட்கப்பட்டுள்ளன.
கடற்கரையோரத்தில் கைவிடப்பட்டிருந்த 12 சந்தேகத்திற்கிடமான மூட்டைகளிலிருந்து குறித்த பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பகுதியில் கடற்படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமையால், கடத்தல்காரர்கள் இந்த மூட்டைகளைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.










