சந்தையில் விற்பனை செய்யப்படும் பூந்தி இனிப்புகளின் 16 மாதிரிகளைப் பரிசோதித்ததில், அவற்றில் 13 மாதிரிகளில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனப் பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
இவ்வாறு தரமற்ற மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களைக் கொண்ட பூந்தி இனிப்புகளை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஐஸ்கிரீம், பால் தேநீர் மற்றும் சிரப் வகைகளின் 21 மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான நுண்ணுயிர்கள் காணப்பட்டுள்ளன.
குறித்த மாதிரிகள் மேலதிகப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான பொருட்களுக்கு கட்டாய தரச் சான்றிதழ் முறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் நுகர்வோர் விவகார அதிகாரசபை பரிசீலித்து வருகின்றது.










