அம்பாறை மாவட்டம், மல்வத்தை விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மல்வத்தை 02, புதுநகர் பகுதியைச் சேர்ந்த இராசேந்திரன் வர்ஷன் (வயது 23) என்ற இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய இளைஞன் காயமடைந்த நிலையில், அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









