கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, குஞ்சு பரந்தன் நீவில் குடமுருட்டி என்னும் பகுதியில், வாழ்வாதாரத்திற்காக நாவல்பழம் விற்ற சிறுவன், விபத்தில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில், நாவல் பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்த குறித்த சிறுவன், திடீரென வீதியை கடக்க முற்பட்ட வேளை, பூநகரி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காட்டு பகுதியைச் சேர்ந்த, நிரோசன் லக்சன் (வயது 10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயம் அடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









