பஸ் சேவைகளைக் கட்டுப்படுத்த தமது சங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், சுமார் 25 சதவீத பஸ்கள் ஏற்கனவே தாமாகவே இயங்குவதை நிறுத்திவிட்டதாகத் தெரிவித்தார்.
பஸ் கட்டணங்களில் கோரப்பட்ட திருத்தத்துக்கு சாதகமான வரவேற்பு இல்லாததாலும், எரிபொருள் விலை உயர்வதாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தலைவர் வலியுறுத்தினார்.
இதன்படி, நாளை (08) முதல் பஸ் சேவைகள் 50 சதவீதம் கட்டுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.