அமெரிக்காவில் கோடை காலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளிலும் திருவிழா நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
திருவிழாக்களை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரண்டு வருவது வழக்கம்.
ஒஹியோ மாகாணத்தில் தொலிடோ நகரில் இதுபோன்று, இசை நிகழ்ச்சியுடன் கூடிய திருவிழா ஒன்று நடத்தப்பட்டது.
இதற்காக உணவு விற்பனை செய்யும் கடைகள், ஷாப்பிங் செய்வதற்கான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு இருந்தபோது, திருவிழா நடந்த பகுதிக்கு அருகே திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த 12 பேரில் 2 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.