நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவீதத்தினர் பல்வேறு மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கூறுகையில், மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்தினர் கடுமையான மனநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
உலக மனநல தினத்திற்காக இன்று புதன்கிழமை நடைபெற்ற தேசிய கொண்டாட்டத்தில் பங்கேற்ற சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இந்த நிலைமை தற்கொலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.