-யாழ் நிருபர்-
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றையதினம் பணிப் பகிஸ்கரிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இந்த பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் இணைந்துள்ளனர்.
இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலுகங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூகமளிக்கவில்லை.
இதனால் பிரதேச செயலகங்களில் மக்கள் சேவைகளை பெற்றுக்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்