பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் குலிஸ்தான்-இ-ஜௌஹரின் பிளாக் 4 என்ற சாலையில் உள்ள சிசிரிவியில் பதிவான ஆண் ஒருவரின் தவறான செயல் இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
குறித்த வீடியோவில் சாலையில் பெண் பர்தா அணிந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தார்.அப்போது இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வீடு ஒன்றின் முன்பு நிறுத்தி உள்ளார். எதிரே நடந்து வந்துகொண்டிருக்கும் பெண்ணை பார்த்ததுமே, திடீரென தன்னுயை கீழ் ஆடையை கழற்றிவிட்டு, நிர்வாணமாக நின்றுள்ளார். மேலும் அந்த பெண் அருகில் வந்ததும், அவரை நோக்கி அநாகரீகமாக சைகை காட்டியதுடன், பாலியல் தொந்தரவும் அளித்துள்ளார்.
தொடர்ந்து குறித்த நபர் பெண்ணின் அருகில் நெருங்கி சென்று அவரை பின்னால் இருந்து தொடுவதற்கு முயற்சி செய்கிறார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண், தன்னை தற்காத்துக்கொண்டு, அந்த இளைஞரை திருப்பி பதிலுக்கு தாக்குகிறார். அந்த பெண்ணின் தாக்குதலை பார்த்து பயந்துபோன இளைஞர் பின்வாங்கி அங்கிருந்து தப்பித்தும் சென்றுள்ளார்.
இது குறித்து பொலிஸார் தெரிவிக்கும் போது யாரும் இந்த சம்பவம் தொடர்பில் புகார் செய்யவில்லை எனினும் இது உண்மை என்று, சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதியாகி உள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குற்றவாளி யார் என்று தெரியவில்லை. அவர் விரைவில் கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்துள்ளனர்.