நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இன்று திங்கட்கிழமை தரையிறங்கும்போது துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து வந்த ஏர்பஸ் ரக விமானமே , காத்மாண்டு விமான நிலையத்தில் தரையிறங்கிய போது அதன் வலது பக்கப் பின்சக்கரத்தில் தீப்பிடித்துள்ளது.
சக்கரத்தில் தீ ஏற்பட்ட உடனேயே மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
விமானத்தில் இருந்த 277 பயணிகள் மற்றும் 11 ஊழியர்கள் என மொத்தம் 288 பேரும் எந்தவித காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காத்மாண்டு விமான நிலையம் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் மற்ற விமானங்களின் சேவையில் சிறிது தாமதம் ஏற்பட்டது.