இலங்கை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கா கனடாவிற்கு சென்றுள்ளார்.
கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில் இலங்கை தேசிய மக்கள் சக்தி கட்சின் அநுர திசாநாயக்க சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ரொறன்ரொ மாநகரில் உள்ள ,Toronto Pavilion- 190- Railside Road, North York மண்டபத்தில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட மக்கள் மத்தியில் ‘தீர்வு நோக்கிய மக்கள் சத்தியை கட்டியெழுப்ப’ என்னும் கருப்பொருளில் உரையாற்றவுள்ளார்.
மேற்படி பொதுக்கூட்டத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலை அநுர திசாநாயக்க ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தை சென்றடைந்த போது அவருக்கு அமோகமான வரவேற்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


