அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் ஐந்து மோட்டார் குண்டுகள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக திருக்கோவில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.