மலையக மக்களின் நில உரிமை கோரி, தலவாக்கலையிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் நோக்கி, 140 கிலோமீட்டர் தூர நடைப்பயணத்தை ஆரம்பித்த சிறுவன் ஒருவன் ஹட்டன் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
லிந்துலை பகுதியைச் சேர்ந்த பிரேம்ராஜ் கார்த்தி என்ற இந்தச் சிறுவன், தலவாக்கலையிலிருந்து சுமார் 21 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஹட்டன் மல்லியப்பு சந்தியை அடைந்தபோது, பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இவ்வளவு சிறிய வயது சிறுவனைப் பயன்படுத்தி, இத்தகைய நீண்டதூர நடைப்பயணத்தை மேற்கொள்வது சாத்தியமில்லை என பொலிஸாரும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களைப் பயன்படுத்தி இவாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் பிராந்திய பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது அச்சிறுவன் நன்னடத்தை அதிகாரிகளின் ஆலோசனையின் பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.