களனிவெளி ரயில் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக, ரயில் சேவைகள் தற்காலிகமாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்ட ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள கோட்டை வீதி ரயில் கடவை (Baseline-Narahenpita Baseline Road Railway Crossing) வரும் மே 23ஆம் திகதி முதல் மே 24ஆம் திகதி வரை முழுமையாக மூடப்படவுள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகள் தங்குதடையின்றி முன்னெடுக்கப்படவுள்ள காலப்பகுதியில், கொழும்பு கோட்டைக்கும் நாரஹேன்பிட்டைக்கும் இடையிலான சில ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன. அத்துடன், பயணிகளின் நலன் கருதி சில ரயில் சேவைகள் மாற்று வழிகளில் இயக்குவதற்கும் ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.