மட்டக்களப்பு மாவட்டத்திற்கு, இன்று புதன்கிழமை உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பொது நூலகத்தினை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு, பிரதம அதிதியாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், குறித்த நூலகத்தினை பொது மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ணசேகர, அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட மேலும் பல உயரதிகாரிகளும் அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கொண்டனர்.

நிகழ்வில் இறுதியில் மாநகர முதல்வரினால் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பென்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி வாசிகசாலை வளாகத்தில் பயன்தரும் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.
