தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, இந்திய வம்சாவளி மக்கள் சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாகவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.