AI சாரி ட்ரெண்டுடன் இன்னும் பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்தாலும், புகைப்படங்களை அப்லோடு செய்வதில் பாதுகாப்பு கவனம் தேவை என நிபுணர்கள் கூகுள் ஜெமினி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் AI ட்ரெண்டிங் கவனம் ஈர்த்து வரும் நிலையில், அதில் சில ஆபத்துகளும் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
கூகுள் ஜெமினியின் நானோ பனானா ஏஐ தொழில்நுட்பம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இதில் போட்டோக்களை அப்லோடு செய்து, என்ன மாதிரியான ஆடைக்கு அதை மாற்ற வேண்டும் என டைப் செய்தால் பயனர்கள் கேட்கும் வகையில் விதவிதமான உருவங்களை அது வழங்குகிறது.
அதில் தற்போது புதிய வரவாக ஏ.ஐ சாரி ட்ரெண்டிங் கவனம் பெற்றுள்ளது. ஏராளமான பெண்கள் தங்களது புகைப்படங்களை அதில் பதிவிட்டு தாங்கள் விரும்பும் வடிவங்களுக்கும் வண்ணங்களுக்கும் மாற்றி வருகின்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களை தற்போது ஆக்கிரமித்து வருகின்றன.
புகைப்படங்களுடன் விண்டேஜ் பாடல்களை இணைத்து ரீல்ஸ்களாக்கி லைக்குகளையும் அள்ளி வருகின்றனர்.
எனினும், இதுபோல அப்லோடு செய்யப்படும் புகைப்படங்கள், மார்பிங் உள்ளிட்ட தவறான செயல்களுக்கு பிறரால் பிரயோகிக்கப்படலாம் என நிபுணர்கள் தற்போது எச்சரித்துள்ளனர்.
எனவே, புகைப்படங்களைத் தேர்வு செய்வதில் மக்கள் கவனமாக இருக்க அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்சிடிவான போட்டோக்களை அப்லோடு செய்யாமல் தவிர்ப்பது, லோகேசன் டேக்குகளை அணைத்து வைப்பது உள்ளிட்டவற்றை பின்பற்றலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, போட்டோக்களை யாருக்கெல்லாம் பகிரலாம் என தேர்வு செய்வதிலும் கவனம் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.