செல்லுபடியாகும் விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் 21 வெளிநாட்டுப் பிரஜைகள் மருதானையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, நேற்று திங்கட்கிழமை இரவு மருதானை தொழில்நுட்ப சந்திக்கு அருகிலுள்ள கட்டடமொன்றில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உட்பட 12 சீனப் பிரஜைகள், ஆறு பங்களாதேஷ் பிரஜைகள் மற்றும் மூன்று இந்தியப் பிரஜைகள் உள்ளடங்குகின்றனர்.
குறித்த வெளிநாட்டவர்கள் செல்லுபடியாகும் விசா இன்றி அக்கட்டடத்தில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.










