கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது பிணை மனு தொடர்பான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு மீதான உத்தரவு நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பிணை கோரிக்கை தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.










