ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இதுவரை 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் 121(1) உறுப்புரைக்கு அமைய தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 20 மனுக்களின் பிரதிகளையும் சபாநாயகர் பெற்றுக்கொண்டுள்ளதாகப் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்” தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களில், குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










