156 கிமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் கைது

சுவிட்சர்லாந்து – வலே மாநில பொலிஸார் கிரிம்செல் பாஸ்  (Grimsel Pass ) மலைப் பகுதியில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்துள்ளனர்.

– கிரிம்செல் பாஸ்  (Grimsel Pass ) மலைப் பகுதி-

80 கிலோமீற்றர் வேகத்தில் செல்ல வேண்டிய மட்டுப்படுத்தப்பட்ட பாதையில் இவர் , மணிக்கு 156 கிமீ வேகத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சுக் மாநிலத்தைச் சேர்ந்த 55 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை மோட்டார் சைக்கிளை அனுமதிக்கப்பட்ட 80 கிமீ வேகத்திற்கு பதிலாக 156 கிமீ வேகத்தில் ஓட்டிச் சென்ற நிலையில் வேக கட்டுப்பாட்டு கமராவில் பாதிவாகி , இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டு , குறைந்தபட்சம் ஒரு வருட சிறைத்தண்டனையுடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.