-யாழ் நிருபர்-
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்றுமுன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணிப் பிரச்சினை ஒன்றில், பெண் ஒருவரை துப்பாக்கி முனையில், கொலை செய்யப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி, சர்ச்சையை உருவாக்கிய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று திங்கட்கிழமை வாக்குமூலம் வழங்குவதற்காக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது கைதுத்துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.