சுவிட்சர்லாந்து ஃப்ரிபோர்க் ( Fribourg) மாநிலத்தில் போசிங்கன் (Bösingen ) அருகே உள்ள ஏ12 அதிவேக மோட்டார் பாதையில் மணிக்கு 204 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற 19 வயதுடைய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை 15ஆம் திகதி நண்பகல் ஒரு மணியளவில் 19 வயது ஓட்டுநர் ஒருவர் நான்கு பயணிகளுடன் ஃபிளாமாட்டிலிருந்து (Flamatt) ஃப்ரிபோர்க் நோக்கி ஏ12 மோட்டார் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது, போசிங்கன் நகராட்சியில் வேககணிப்பு கமராவில் அவரது வேகம் மணிக்கு 204 கிமீ வேகத்தில் அளவிடப்பட்டது.
இதையடுத்து மாட்ரான்(Matran) பகுதியில் மாநில பொலிசார் வாகனத்தை வழிமறித்தனர்.
போலிசாரின் விசாரணைக்குப் பின்னர் ஓட்டுநர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.