சுற்றிவளைக்கப்பட்ட சட்டவிரோத மாடு வெட்டும் நிலையம் – உயிருடனும் இறைச்சியாகவும் மாடுகள் மற்றும் ஆடுகள் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகாமையில் நீண்டகால காலமாக இயங்கி வந்த சட்டவிரோத மாடு வெட்டும் இடம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது நான்கு மாடுகள் வெட்டப்பட்டு தலைகள் உட்பட மாட்டின் உடற் பகுதிகள் அந்த பகுதியில் காணப்பட்டன.

மேலும் 21 மாடுகள் மற்றும்  4 பெரிய ஆடுகள், இரண்டு குட்டி ஆடுகளும் மீட்கப்பட்டன.

திருட்டுதனமாக மாடுகள் பிடித்து வரப்பட்டு இந்த இடத்தில் வைத்து வெட்டப்படுவதாகவும் ஒரு நாளைக்கு 6 மாடுகள் வெட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மாடு வெட்டிக்கொண்டிருக்கும்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

உயிருடன் மீட்கப்பட்ட மாடுகள் உணவின்றி சோர்ந்து போய் காணப்பட்டதுடன், அவற்றிற்கு பொலிஸார் தண்ணீர் வழங்கி அங்கிருந்து மீட்டுள்ளனர்.

https://youtu.be/wjxIsObMSXY

 

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்