அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-

 

கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உள்ஹிடிய நீர்த்தேக்கத்தில் நபர் ஒருவரின் சடலம் நீரில் மிதப்பதை மீன் பிடிக்க சென்ற நபர் ஒருவர் அவதானித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து குறித்த மீனவர் சடலம் ஒன்று மிதப்பதாக கிராந்துருகோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த கிராந்துருகோட்டை பொலிஸார் சடலம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன்,  இதுவரையில் சடலம் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்தனர்.

சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்