சாள்ஸ் நிர்மலநாதன் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை – எம்.ஏ.சுமந்திரன்
-வவுனியா நிருபர்-
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பொதுத் தேர்தலில் போட்டியிட எமது கட்சியிடம் விண்ணப்பிக்கவில்லை, என கட்சியின் வேட்பாளர் தெரிவுக் குழு உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முன்னதாக இளையவர்களுக்கு வாய்ப்பளித்து தான் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார். எனினும் அதன் பின்னர் சுமந்திரனின் கோரிக்கையை ஏற்று சாள்ஸ் வேட்பாளராக போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. .
இந்நிலையில், வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது உண்மையில் அவர் போட்டியிடுகின்றரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தான் இம்முறை போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார்.
தற்போது போட்டியிடுவதாக செய்தி வந்ததாக கூறுகின்றீர்கள், அவ்வாறு எமக்கு தெரியாது, அவர் போட்டியிட விண்ணப்பிக்கவில்லை, எனத் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்