பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சமூக ஊடகங்கள் ஊடாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 47 வயதுடைய சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை இலங்கை பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த அஹமட் லெப்பை முஹம்மட் அஸ்லம் என்பவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், இதுவரையில் அவர் தங்கியிருக்கும் இடம் தொடர்பான தகவல்கள் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரின் முகவரி இலக்கம் 478/A1, அலீம் வீதி, சாய்ந்தமருது 16 எனப் பொலிஸார் அடையாளம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
- சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071-8591162
- சம்மாந்துறை பொலிஸ் நிலையம்: 067-2260222
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










