இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை சற்றே அதிகரித்துள்ளது.
இதன்படி, பெரும்பாலான வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 336 ரூபாயாகக் குறைந்துள்ளது.
இன்றைய வங்கிகளின் டொலர் மாற்று விகிதங்கள் வருமாறு:
– செலான் வங்கி: அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.40 ரூபாயாகவும், விற்பனை விலை 337.65 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
– NDB வங்கி: கொள்வனவு விலை 328.25 ரூபாயிலிருந்து 327.80 ரூபாயாகவும், விற்பனை விலை 337.25 ரூபாயிலிருந்து 336.80 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
– மக்கள் வங்கி: கொள்வனவு விலை 328.55 ரூபாயிலிருந்து 328.30 ரூபாயாகவும், விற்பனை விலை 336.70 ரூபாயிலிருந்து 336.44 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
– கொமர்ஷல் வங்கி: கொள்வனவு விலை 326.72 ரூபாயிலிருந்து 326.58 ரூபாயாகவும், விற்பனை விலை 336.65 ரூபாயிலிருந்து 336.50 ரூபாயாகவும் குறைந்துள்ளது.
– சம்பத் வங்கி: அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.50 ரூபாயாகவும், விற்பனை விலை 336.50 ரூபாயாகவும் மாற்றமின்றிக் காணப்படுகிறது.
இதன்படி, சில வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் குறைந்துள்ள நிலையில், ஏனைய சில வங்கிகளில் மாற்றமின்றிக் காணப்படுகின்றன.










