கொய்யாப்பழம் நன்மைகள்

கொய்யாப்பழம் நன்மைகள்

கொய்யாப்பழம் நன்மைகள்

🔷🔶பழங்கள் மிகவும் சத்தானவை மற்றும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அந்த வகையில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்த பழங்களில் கொய்யாப்பழம் ஒன்றாகும். அந்தவகையில் கொய்யாபழத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

🍈கொய்யா பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை குணப்படுத்த சிறந்த உணவாகும். இதனால்தான் மலச்சிக்கல் ஏற்படும் போது கொய்யாவை சாப்பிட வேண்டும்.

🍈கொய்யாவில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் வாயுப்பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக கருதப்படுகிறது,

🍈கொய்யாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஜலதோஷத்தை குறைக்கவும் உதவும். உடலில் பாக்டீரியாவை எதிர்த்து போராடி செல்கள் சேதம் அடைவதை தடுக்கும்.

🍈கொய்யாபழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள பலவிதமான வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கின்றன.

🍈கொய்யாவை சாப்பிட்டால் வாயு மற்றும் அசிடிட்டி பிரச்சனை தீரும். ஏனெனில் கொய்யாவும் அமில தன்மை கொண்ட பழம். எனவே, கொய்யாவை உண்பதன் மூலம் வாயுவை வெளியேற்றுவது எளிது.

🍈கொய்யாப்பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டவை. புற்றுநோய்க்கு வித்திடும் செல் வளர்ச்சியை தடுக்க உதவும். மேலும் கொய்யப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் அதிகமாக இருப்பதால் மார்பக புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

🍈கொய்யாவானது அவற்றில் நிறைந்துள்ள நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தடுக்கின்றன. குறைந்த கிளைச்மிக் குறியீட்டின் காரணமாகச் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப் பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்த உணவாக இருக்கும்.

🍈கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி‍ 9’ அல்லது போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் ‘பி 9’ மற்றும் போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இவை குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்க உதவுகிறது. மேலும் நரம்பியல் கோளாறுகளிலிருந்து புதிதாகப் பிறக்கும் குழந்தையைப் பாதுகாக்கிறது.

🍈கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ மற்றும் உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள்களான (ஆண்டிஆக்ஸிடண்ட்) கரோட்டின் (Carotene) மற்றும் லைக்கோபீனே (Lycopene) போன்றவை அடங்கியுள்ளன. இவை வயதான பின் ஏற்படும் சுருக்கங்களிலிருந்து தோலைப் பாதுகாக்க உதவி செய்கிறது. தினம் ஒரு கொய்யா சாப்பிட்டால், தோல் சுருக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

🍈கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘பி 3’ மற்றும் வைட்டமின் ‘பி 6’ ஐக் கொண்டுள்ளது. இவை நயசின் மற்றும் பைரிடாக்சின் என்ற பெயர்களில் அழைக்கப்படுவது நாம் அறிந்ததே. மெலும் கொய்யாப் பழம் மூளையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. அறிவாற்றல் செயல்பாட்டினையும் தூண்டுகிறது. மேலும் கொய்யாப் பழம் நரம்புகளுக்கு ஓய்வினை அளிக்கிறது.

கொய்யாப்பழம் நன்மைகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்