கொங்கோ குடியரசின் சுரங்க அமைச்சரை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த நேரத்தில் அமைச்சர் லூயிஸ் வாதும் கபாம்பா மற்றும் 19 பயணிகள் விமானத்தில் இருந்ததாகவும் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கொங்கோ தலைநகர் கின்ஷாசா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், லுவாலாபா மாகாணத்தில் உள்ள கோல்வேசி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.