12 வயது சிறுமி ஒருவரை 2 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து அதனை கூகுள் டிரைவில் பதிவேற்றிய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் வசிக்கும் 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரின் உறவு முறை சிறுமியே இந்த இளைஞனால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி அதை வீடியோ எடுத்து கூகுள் டிரைவில் பதிவேற்றியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுவர் ஆபாசப் படங்களை பார்க்கும் மற்றும் பகிரும் நபர்களை இலகுவாக அடையாளம் காண கூகுள் நிறுவனம் இலங்கை பொலிஸாருக்கு அறிமுகப்படுத்திய புதிய முறையின் பிரகாரம் கூகுள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதல் கைது இதுவாகும்.