கிரிஷ் கொடுக்கல்வாங்கலில் 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு குற்ற பத்திரிகைகள் ஒப்படைக்கப்பட்டன.
சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிகைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் மேல் நீதிமன்ற நீதிபதி பிரதிவாதி நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.