-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – அரியாலைப் பகுதியில், கிணற்றினுள்ளிருந்து வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் இருந்த கிணற்றினை சுத்தம் செய்த போது, அந்த கிணற்றினுள் கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன இருப்பது அவதானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், ஆரம்பக் கட்ட விசாரணைகளை முன்னெடுத்ததுடன், இன்று புதன்கிழமை நீதிமன்ற அனுமதியைப் பெற்று, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் குண்டுத் செயலிழக்கச் செய்யும் பிரிவினரின் உதவியுடன் அவற்றை முழுமையாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.










