மின்சாரத் தேவையை முகாமைத்துவம் செய்வதற்காக, இலங்கையின் நான்கு வலயங்களில் இன்று புதன்கிழமை ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.
இதற்கமைய, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையான காலப்பகுதியில், ஒவ்வொரு வலயத்திலும் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அட்டவணையின்படி, குழு 3 இற்கு மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரையும், குழு 4 இற்கு மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
அத்துடன், குழு 1 இற்கு மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரையும், குழு 2 இற்கு இரவு 7.30 மணி முதல் 8.00 மணி வரையும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டாளர் (தனியார்) நிறுவனம் முன்வைத்த மின்வெட்டு அட்டவணைக்கு, கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
ஒக்டோபர் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையான மூன்று நாட்களுக்கு இந்த அட்டவணை நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











