நம் முன்னோர்கள் அமர்ந்திருக்கும் போது கால் ஆட்ட கூடாது என்று சொல்லுவார்கள்,சாஸ்திர படி கால்களைகளை ஆட்டினால் சந்திரன் நிலை பாதிக்கும் என்பார்கள் சந்திரன் நிலை கெட்டால் மனநிலை பாதிக்கும்.
கால் அசைவு ஏற்படுவது குறிப்பாக ஓய்வாக இருக்கும்போது அல்லது இரவு நேரங்களில் கால்களில் அசௌகரியம், எரிச்சல் அல்லது கால்களை அசைக்க வேண்டும் என்ற தீவிர உணர்வு இருந்தால், அது‘நிலைகொள்ளாத கால்கள் குறைபாடு’ அல்லது ‘அமைதியற்ற கால்கள் நோய்க்குறியாக (Restless Legs Syndrome) போன்ற மருத்துவ நிலையின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
கால் ஆட்டுவது மட்டும் ஒரு நோயின் அறிகுறி என்று கூற முடியாது. அது சிலருக்கு ஒரு சாதாரண பழக்கமாக இருக்கலாம்; சிலருக்கு உடல் அல்லது மனநிலையின் இயல்பான சிக்னலாக இருக்கலாம். ஆனால், இந்தப் பழக்கம் அதிகமாகத் தொடர்ந்தாலோ அல்லது வேறு உடல் அசௌகரியங்களுடன் இணைந்திருந்தாலோ, மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
உடல் நமக்குக் கொடுக்கும் ஒவ்வொரு சிறிய சிக்னலுக்கும் ஒரு காரணம் இருக்கும். அந்தச் சிக்னல்களைப் புரிந்துகொண்டு, தேவையான நேரத்தில் கவனம் செலுத்துவதுதான் நல்ல ஆரோக்கியத்திற்கான முதல் படியாகும்.










