-காரைதீவு நிருபர் -சிறிதரன் கஜானன்-
அம்பாறை கல்முனை-பெரியநீலாவணை அரசடி ஸ்ரீ முருகன் ஆலயம் புனராவர்த்தன பஞ்சகுண்டபக்ஷ நூதனப் பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் முதலாம் நாள் ஆகிய இன்று புதன்கிழமை கர்மாரம்பம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நாளை வியாழக்கிழமை காலை விநாயக வழிபாடு காலை 7.00 மணி தொடக்கம் மாலை 6:00 மணி வரை அடியவர்கள் எண்ணேய்க்காப்பு சாத்தும் வைபவம் நடைபெறும்


