சிலாபம் கடற்கரை மீண்டும் கடுமையான கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிலாபம் – அம்பகதவில கிராமத்தில் உள்ள பல இடங்கள் கடலரிப்புக்குள்ளாகியுள்ளன.
குறித்த பகுதியில் உள்ள இறால் வளர்ப்பு நிலையங்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறால் வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.