ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலை ஒன்றில், துப்பாக்கிகளுடன் நுழைந்த ஆயுத கும்பல், ஆசிரியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கடத்தி சென்றனர்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, 12 ஆசிரியர்கள் உட்பட 315 பேர் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
இதற்கிடையே கடந்த 17 ஆம் திகதி கெபி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், 25 மாணவிகளை கடத்திச் சென்றனர்.
இதனால் பாதுகாப்பு கருதி விடுதியுடன் கூடிய பாடசாலைகளை தற்காலிகமாக மூட அரசாங்கம் உத்தரவிட்டது.
அரசாங்கத்தின் உத்தரவை மீறிப் பாடசாலைகள் செயற்பட்டதே குறித்த கடத்தல் சம்பவத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடைபெறுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த சூழலில் அடுத்தடுத்து மாணவர்கள் கடத்தப்படுவது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், கடத்தப்பட்ட 303 மாணவர்களில் சுமார் 50 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.